மதுராந்தகம் – தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இந்த சூழலில் இன்று மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் கடந்த 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

மதுராந்தகம் வாக்குப்பதிவு நிலவரம்

காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகள் பதிவானது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தாராபுரம் வாக்குப்பதிவு நிலவரம்

தாராபுரம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 17.55 சதவீத வாக்குகள் பதிவானது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி 78.53 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பலத்த பாதுகாப்பு

சில வாக்குச்சாவடிகளில் மின்வெட்டு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டன. பின்னர் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial