செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ElevenLabs, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் சுமார் 100 பேர் கொண்ட குழுவை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ElevenLabs, குரல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் சுமார் 100 பணியாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் பொறியியல், ஆராய்ச்சி, விற்பனை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் இடம்பெற உள்ளனர்.
ElevenLabs தற்போது 14 இந்திய மொழிகளில் தனது செயற்கை நுண்ணறிவு குரல் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மற்ற மொழிகளையும் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. பணம் செலுத்துதல், வாடிக்கையாளர் சேவை, முன்பதிவு, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இதையும் படிங்க : அமெரிக்க பங்குச்சந்தையில் புதிய வரலாறு.. செயற்கை நுண்ணறிவு மீது குவியும் முதலீடு

