‘போஸ்ட்பெய்டு’ திட்டங்களின் விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய கட்டணத்தைவிட மாதத்திற்கு ரூ.50 வரை கட்டணம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள் 2026 அக்டோபர் 8 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கூடுதல் பலன்களை இணைத்துள்ளதால், மாதாந்திர கட்டணத்தில் ரூ.50 உயர்த்தியுள்ளது. புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச சர்வதேச ரோமிங் சலுகை வழங்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு குடும்பத் திட்டத்தில் நான்கு உறுப்பினர்களின் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டுக்கு ஒரு முறை இந்த இலவச ரோமிங் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவச ரோமிங் வசதியுடன், ஏர்டெல் பயனர்கள் வரம்பற்ற டேட்டா மற்றும் காலிங் வசதியையும், ஏர்டெல்லின் ஸ்பேம் மற்றும் மோசடி தடுப்பு அம்சங்களையும் பெறலாம்.

பழைய போஸ்ட்பெய்ட் அல்லது ப்ரீபெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தும் தற்போதைய ஏர்டெல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் ஸ்டோர் மூலம் மேம்படுத்திக்கொள்ளலாம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial