திரையரங்குகளில் புதிய படங்களை பார்ப்பதைப் போலவே, தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், அக்டோபர் 9-ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள்
இந்த வாரம், ‘எபிக்’ என்ற தெலுங்கு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் சூரி நடித்த ‘மண்டாடி’ தமிழ் திரைப்படமும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான ‘கலிஃபா’ அமேசான் பிரைமிலும், ‘பிரதம த்ருஷ்ட்யா குற்றக்கார்’ நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகின்றன.
இந்தி திரைப்படங்கள்
‘சாலே ஆஷிக்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. ‘ரிப்போர்ட்டிங் லைவ்’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. மேலும், ‘ஆடம் அண்ட் ஈவ்’ லயன்ஸ்கேட் பிளே தளத்தில் வெளியாகிறது.
வெப் சீரிஸ்
‘ஐஷ்கா ஐஷ்கா’ முதல் சீசன் அமேசான் பிரைமில் வெளியாகிறது. ‘லீஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
ஆங்கிலத்தில் உருவான ‘கேரி’ முதல் சீசன் அமேசான் பிரைமிலும், ‘பிலோ’ தொடர் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகின்றன. ‘டாக்’ மூன்றாவது சீசன் சோனிலிவ் தளத்தில் வெளியாக உள்ளது.
ஆங்கில திரைப்படங்கள்
‘மேட்ச்பாக்ஸ்’ ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகிறது. ‘டிஸ்க்ளோஷர் டே’ பீகாக் தளத்திலும், ‘தி சைலன்ட் பிளானெட்’ அமேசான் பிரைமிலும் வெளியாகிறது. ‘மோர்டல் கோம்பாட் II’ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும், ‘அபோவ் அண்ட் பிலோ’ லயன்ஸ்கேட் பிளே தளத்திலும், ‘ஓயாசிஸ்: டோன்ட் லுக் பேக் இன் ஆங்கர்’ ஹுலு தளத்திலும் வெளியாகின்றன.

