10,000 போலி கணக்குகள், ஏ.ஐ பாடல்கள் : ரூ.67 கோடி ஸ்ட்ரீமிங் மோசடி

அமெரிக்காவில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட பாடல்கள், ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இசை ஒலிபரப்பு தளங்களையும் உண்மையான இசைக்கலைஞர்களையும் ஏமாற்றும் வகையில் இந்தத் திட்டத்தை நடத்தியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மைக்கேல் ஸ்மித் என்ற 54 வயது நபர், அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் உள்ளிட்ட இசை ஒலிபரப்பு தளங்களில் ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கியுள்ளார். இந்தக் கணக்குகளை உருவாக்க போலி மின்னஞ்சல் முகவரிகளும் மோசடியாக பயன்படுத்தி உள்ளார்.

போலி கணக்குகளை உருவாக்கிய பிறகு, அவற்றை தொடர்ந்து இசையை ஒலிபரப்புவதற்காக மென்பொருளை பயன்படுத்தியுள்ளார். இந்தப் பாடல்கள் அவரது போலி கணக்குகள் மூலம் பலமுறை ஒலிபரப்பப்பட்டன. அதை வைத்து இசைக்கான ராயல்டி தொகையை பெற்றுள்ளார். இதுவரை 8 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial