தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு தவெக அரசு பொறுப்பாகாது – வைகோ பேட்டி

கடந்த செப்டம்பர் மாதம் தவெக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கின. முதல்வர் விஜய் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சில கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தவெக நிர்வாகி கண்ணன் கொலை, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை, திருவொற்றியூர் மாணவர் தினேஷ் கொலை, திருத்தணியில் நடைபெற்ற கொலை என பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்கலாம். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் நிலைப்பாட்டில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது. எம்ஜிஆர், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலங்களிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.

திடீரென நடைபெறும் கொலைச் சம்பவங்களை காவல்துறையால் முன்கூட்டியே முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியாது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial