மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு: 6-வது சுற்றில் த.வெ.க. முன்னிலை

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் உள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் 6-வது சுற்று முடிவில் த.வெ.க. 24,008 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. 15,769 வாக்குகள் பெற்று தி.மு.க. இரண்டாம் இடமும், 14,112 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. மூன்றாம் இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கட்சி 332 வாக்குகளும், சிபிஎம் 156 வாக்குகளும் பெற்றுள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial