மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் இருந்து வந்தது.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 67,819 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 48,516 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 43,233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial