பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலின் முக்கிய சிறப்புகள் என்னென்ன?

சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2026 அக்டோபர் 11ஆம் தேதி பயணிகள் சேவைக்குத் திறக்கப்பட்டது. சுமார் ரூ.4,900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், 11 ரயில் நிலையங்கள் உள்ளது.

வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ திட்டம்

சென்னை வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம், 2020 நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது. 2025 ஜூன் மாதம், பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் சந்திப்பு வரையிலான பகுதியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து, 2026 ஜனவரி மாதம் போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சேவை தொடக்கம்

போரூர் புறவழிச்சாலை அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் இணைந்து ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

11 ரயில் நிலையங்கள்

சுமார் 14.64 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு, வடபழனி என மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேவையின் சிறப்புகள்

புதிய வழித்தடத்தில் ஆரம்பகட்டமாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போரூர் சந்திப்பு – வடபழனி இடையே 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த 7 மெட்ரோ நிலையங்களில் ரெயில் இப்போதைக்கு நிற்காது. தற்போதைய சூழ்நிலையில், போரூருக்கு பிறகு வடபழனியில்தான் ரெயில் நிற்கும்.

ஆளில்லா ரெயில் இயக்க வசதி, தானியங்கி ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தானியங்கி பாதுகாப்பு அமைப்பு, தகவல் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாடு, பயணிகள் பாதுகாப்பு கதவுகள் போன்ற புது அம்சங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial