தங்கத்துல பல், ஆடம்பரமான வாழ்க்கை.., 25 வயது இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்

சிம் கார்டு மூலம், ₹2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியைத் திருட உதவிய இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஷின்ஜின் என்ற அந்த நபர், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் தொலைபேசி எண்களை குறிவைத்து அவர்களது கணக்குகளில் இருந்த பணத்தைத் திருடிய சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் அவர்களுக்குச் சொந்தமில்லாத சிம் கார்டுகளுக்கு மாற்றப்பட்டதை இங்கிலாந்தின் தொலைத்தொடர்பு நிறுவனம் கண்டுபிடித்தது. இந்த தகவலை வைத்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. இதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தன.

2021 நவம்பர் 2 அன்று ஒருவரிடமிருந்து சுமார் 40,000 பவுண்டு மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டது. இதில் சுமார் 27,000 பவுண்டு ஷின்ஜினின் தனிப்பட்ட கிரிப்டோகரன்சி கணக்கிற்குச் சென்றது. இது வரை சுமார் 2 லட்சம் பவுண்டு மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டது தெரிய வந்தது. இந்திய மதிப்பில் இது ரூ.2.5 கோடி ஆகும்.

திருடப்பட்ட பணத்தில், தங்க முலாம் பூசப்பட்ட பற்கள், துபாய், லண்டன் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்த திருட்டு வழக்கில் ஷின்ஜின் ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2026 செப்டம்பர் 28 அன்று அவர் இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிமன்றம் அவருக்குச் இரண்டரை ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்தது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial