சாலையோரம் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஆட்டோ ஓட்டுநர் கைது

ஆந்திராவில் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், சாலையோரத்தில் ஆதரவற்ற பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் பெண்ணை தாக்கியுள்ளார்.

பெண்ணின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை வைத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சம்பசிவ ராவ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது ஏற்கெனவே இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தங்கத்துல பல், ஆடம்பரமான வாழ்க்கை.., 25 வயது இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial