மோடி குறித்த கருத்து: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை

பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாஜகவை சேர்ந்த மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். இதையடுத்து, மும்பை நீதிமன்றம் ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு 2019ம் ஆண்டில் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், மகாராஷ்டிர அரசுக்கும், புகார்தாரரான ஸ்ரீஸ்ரீமாலுக்கும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க : அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial