குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில், பாஜக 38 இடங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களை கைப்பற்றியுள்ளது.
குஜராத்தின் காந்திநகர் மாநகராட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது. தாரா நகராட்சியில் 81.18 சதவீதமும், ஓக்கா நகராட்சியில் 63.27 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் 59.25 சதவீத வாக்குகள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்ட்டுள்ளது.
மொத்தமுள்ள 44 இடங்களில் பாஜக 38 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை ஒரு இடத்தைப் பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது பாஜக 3 இடங்களை இழந்துள்ளது. காங்கிரசுக்கு 3 இடம் அதிகரித்துள்ளது. கடந்த முறை ஒரு இடத்தைப் பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி இந்த முறை அதனை இழந்துள்ளது.

