உலகளாவிய மெமரி சிப் தட்டுப்பாட்டால் 2026-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 20% சரிவை சந்தித்துள்ளது. 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்றாவது காலாண்டில் பதிவான மிகப் பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதி குறைந்தபோதிலும், சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் உலகச் சந்தையில் தங்களது பங்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தரவு மையங்களுக்கான நினைவகச் சிப்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான சிப்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுக் கணினி மையங்களுக்குத் தேவையான மெமரி சிப்களை வாங்குவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் சிப்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது செலவுகளைச் சமாளிக்க விலைகளை உயர்த்த வாய்ப்பு உள்ளது. குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம்.
சிப் விலை உயர்வால் குறைந்த விலையில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது, விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வாங்குவது குறையலாம். விலையை உயர்த்தாமல் இருந்தால் நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

