ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (அக்டோபர் 15) வெளியாகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திற்கும் ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முன்பதிவு வசூல் ரூ.31.70 கோடி கடந்தது. தற்போது வரை ரூ.58.92 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் வெளியான பிறகு முதல் நாள் வசூல் ரூ.125 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

