தமிழகத்தில் 2027-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதியும் தொடங்குகின்றன
பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை 2027
- மார்ச் 3: தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்கள்
- மார்ச் 8: ஆங்கிலம்
- மார்ச் 12: வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
- மார்ச் 15: கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
- மார்ச் 19: உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்கள்
- மார்ச் 23: இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்கள்
- மார்ச் 29: கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பாடங்கள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2027
- மார்ச் 17: தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்கள்
- மார்ச் 25: ஆங்கிலம்
- மார்ச் 31: கணிதம்
- ஏப்ரல் 5: அறிவியல்
- ஏப்ரல் 9: சமூக அறிவியல்
- ஏப்ரல் 12: விருப்ப மொழிப்பாடம்
தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
2027-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியாகிறது.

