பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரில், பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 32 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
தற்போது, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் மேலும் சில குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் இரண்டு மாடிக் கட்டடத்தின் மேற்கூரை வலுவிழந்து இடிந்து விழுந்ததாக உள்ளூர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் ஆசிரியர் உட்பட 32 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு 6 முதல் 14 வயது வரை இருக்கும் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்த 50 குழந்தைகள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணத்தைக் கடனறிந்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

