உலகளவில் மாஸ் காட்டிய ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் நாள் வசூல்..!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவான ‘ஜெயிலர் 2’ நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை ரசிகர்கள் உற்சாமாக வரவேற்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில், ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளது. தமிழில் ரூ.43.35 கோடி, தெலுங்கில் ரூ.12.50 கோடி, ஹிந்தியில் ரூ.3.50 கோடி, கன்னடத்தில் ரூ.35 லட்சம் வசூல் செய்துள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். வாரவிடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து வருவதால் படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial