75 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்யும் 30 வயது பெண்

உத்தரப் பிரதேசத்தில் 75 வயது முதியவரை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அவுரையா பகுதியைச் சேர்ந்தவர் ரீனா. 30 வயதான இவர், 75 வயதான ராம் சாகர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சி சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இவர்களது திருமணம் நவராத்திரி பண்டிகைக்குப் பிறகு நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீனா மற்றும் ராம் சாகர் இருவரும் சுமார் ஓராண்டுக்கு முன்பு சந்தித்த போது, நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

ரீனாவுக்கும் ராம் சாகருக்கும் இடையே 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. இந்த வயது வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial