நவராத்திரி பண்டிகையின் நிறைவான பத்தாவது நாளில் வரும் தசமி திதியில் கொண்டாடப்படுவது தான் விஜயதசமி. தமிழகத்தில் விஜயதசமி என்றும், வட மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுவது வழக்கம்.
தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
“நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு சேர்க்கட்டும். நன்மை தரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும். அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.
செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும்; “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என கூறியுள்ளார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாள், நம் வாழ்வில் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். அன்னை பராசக்தியின் அருளால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், வளமும் பெருகட்டும். இந்தப் புனிதத் திருநாளில், அனைவரது முயற்சிகளும் வெற்றியடையவும், இல்லங்களில் அன்பும் அமைதியும் நிலவவும், நம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய முயற்சிகளைத் தொடங்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும். அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

