எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்? வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹேக்கர்கள் மேற்கொண்ட இந்த இணையவழித் தாக்குதலில், எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தால் வங்கியின் முக்கியச் செயல்பாடுகள் பாதிக்கவில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தகவல்கள் எவ்வாறு வெளியேறின, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எத்தகைய பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது போன்ற விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், வங்கி அதிகாரிகள் போலப் பேசித் தொலைபேசியில் ஏமாற்றுவது, போலியான குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற மோசடிகள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சந்தேகத்துக்குரிய லிங்கை கிளிக் செய்யவோ, தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும். சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை இருந்தால் உடனடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் புகார் அளிக்கவும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial