திடீரென பிரேக் போட்டீர்களா? நீங்கள் எப்படி கார் ஓட்டுகிறீர்கள் என்பதை உங்கள் மொபைல் சொல்லிவிடும்

கார் ஓட்டுபவர்கள் தங்களுடைய ஓட்டும் பழக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் புதிய வசதியைச் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன் யூஐ 9 மென்பொருள் புதுப்பிப்பில் இடம்பெற்றுள்ள டிரைவிங் ரிப்போர்ட் (Driving Report) வசதி உங்களது பயணம் குறித்த விவரங்களை வழங்குகிறது. பயணத்தின் தூரம், எடுத்துக்கொண்ட நேரம், சராசரி வேகம், திடீர் பிரேக் உள்ளிட்ட விவரங்களை இந்த வசதியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சாம்சங் ஒன் யூஐ 9 டிரைவிங் ரிப்போர்ட் என்றால் என்ன?

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் இந்த வசதி, வாகனம் ஓட்டும்போது உங்களது மொபைல் உங்களின் இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்திப் பயண விவரங்களைப் பதிவு செய்கிறது. கார் புளூடூத் இணைப்புடன் மொபைல் இணைக்கப்படும்போது, பயண விவரங்களை பதிவு செய்யும்.

இதன் மூலம், எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தீர்கள்? எப்போது பயணத்தைத் தொடங்கினீர்கள், எவ்வளவு நேரம் வாகனம் ஓட்டினீர்கள் என்பதைப் பார்க்கலாம். வாகனம் ஓட்டியபோது கைப்பேசி எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் பார்க்க முடியும். மேலும், பயணத்தின்போது திடீர் வேக அதிகரிப்பு அல்லது பிரேக் போன்ற நிகழ்வுகள் பதிவான இடங்களை பார்க்க முடியும்.

சாம்சங் போனில் டிரைவிங் ரிப்போர்ட்டை இயக்குவது எப்படி?

இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

உங்கள் சாம்சங் கேலக்ஸி கைப்பேசியில் அமைப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

இணைக்கப்பட்ட சாதனங்கள் (Connected Devices) என்ற பிரிவைத் திறக்கவும்.

டிரைவிங் ரிப்போர்ட் (Driving Report) என்ற வசதி உள்ளதா எனப் பார்க்கவும்.

திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான அனுமதிகளை வழங்கவும்.

மூன்று புள்ளிகள் கொண்ட பட்டியலில் உள்ள அமைப்புகள் பகுதிக்குச் செல்லவும்.

வாகனங்கள் (Vehicles) என்ற பிரிவில் உங்கள் காரைச் சேர்க்கவும்.

கார் பட்டியலில் இல்லையெனில், முதலில் புளூடூத் மூலம் கைப்பேசியுடன் இணைக்கவும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial