காவல் துறை வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ! காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோவைப் பகிர்ந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் அதிகாரப்பூர்வ குழுவில் இத்தகைய வீடியோ பகிரப்பட்ட சம்பவம் காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள பதாபூர் காவல் நிலையத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் குழுவில் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆபாச வீடியோவைப் பகிர்ந்ததாகப் புகார் எழுந்தது. வீடியோ பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே அது நீக்கப்பட்டது. இருப்பினும், அதற்குள் சில காவலர்கள் அந்த வீடியோவைப் பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பிஜ்னோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் பிஷ்னோய் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு பதாபூர் காவல் நிலையத்தில் காவல் நிலையப் பொறுப்பாளராகப் பணியாற்றிய காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial