இரவில் அழுததால் 8 மாதக் குழந்தையைக் கொன்ற கொடூரம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் கைது

கேரளாவில் இரவில் அழுததற்காக எட்டு மாதக் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில், குழந்தையின் தாய் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், எட்டு மாதக் குழந்தையின் உடல் சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

காவல்துறையினரின் விசாரணையின்படி, குடும்பத் தகராறு காரணமாக மஞ்சு தனது கணவர் இசக்கியிடமிருந்து பிரிந்து குழந்தையுடன் ஆலப்புழாவுக்குச் சென்றுள்ளார். அப்போது சிவன் என்ற நபர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் குழந்தையுடன் சங்கனாசேரி பகுதியில் வசித்துள்ளனர்.

ஒரு நாள் இரவு குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த சிவன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மஞ்சுவை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மஞ்சு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சிவன் மற்றும் அவரது சகோதரர் சக்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial