ராஜஸ்தானில் தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என்று கூறி, 29 வயது இளைஞர் ஒருவர் நள்ளிரவில் செல்போன் டவர் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் சைலேந்திர குமார் என்ற 29 வயது இளைஞர், தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்போன் டவரில் ஏறியுள்ளார்.
இளைஞர் கோபுரத்தின் மீது ஏறிய தகவல் பரவியதும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். சிலர் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரை சமாதானப்படுத்த முயன்றனர். பலமுறை முயற்சித்தும் அந்த நபர் கீழே இறங்க மறுத்துள்ளார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இளைஞர் கீழே இறங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுமித்ரா மிஸ்ரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

