மின்வெட்டின் போது செல்ஃபி அனுப்பினால் ‘ஜெயிலர் 2’ டிக்கெட் இலவசம் : அதிமுகவின் புது முயற்சி

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் திருப்பூர் பகுதியில் உள்ள அதிமுகவின் 9-வது வார்டு கவுன்சிலர் வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளார். அதாவது, மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் தங்களது வீட்டில் இருந்து செல்ஃபி எடுத்து, அதனை வாட்ஸ்அப் குழுவில் அனுப்ப வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளனர்.

அவ்வாறு புகைப்படங்களை அனுப்புபவர்களுக்கு ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலரின் அறிவிப்புக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. பலரும் மின்வெட்டின்போது எடுத்த செல்ஃபிகளை அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம், இதுவரை 125 பேருக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை, திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்வெட்டின்போது செல்ஃபி அனுப்பினால் இலவசத் திரைப்பட டிக்கெட் என்ற நிபந்தனை, திருப்பூர் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. மின்வெட்டுப் பிரச்சினையைப் பொதுமக்களிடம் இருந்து புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial