‘ரஜினி சாரால் மட்டுமே சாத்தியம்’ – ஜெயிலர் 2 படத்தை பாராட்டிய பிரபல நடிகர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வெளியான முதல் நாளில் இப்படம் உலகளவில், ரூ.125.25 கோடி வசூல் செய்தது. தொடர் விடுமுறை மற்றும் ரசிகர்களின் அமோக வரவேற்பால் படத்தின் வசூல் மேலும் அதிகரித்தது. ஜெயிலர் – 2 திரைப்படம் முதல் வார முடிவில் உலக அளவில் ரூ. 549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ‘ஜெயிலர் 2’ படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, “ஜெயிலர் 2 திரைப்படம் ஒரு அக்னிப் பிழம்பு. ரஜினி சாரின் ஸ்டார் பவர், ஸ்வாக் மற்றும் அவரது ஆளுமைக்கு சான்றாக இப்படம் அமைந்துள்ளது. சட்டை கூட கலையாமல் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்வது ரஜினி சாரால் மட்டுமே சாத்தியம். நெல்சன் திலீப்குமார் மீண்டும் ஒரு மாஸான, அதிரடியான வெற்றியைத் தந்துள்ளார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் ” என்று தெரிவித்துள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial