சிம் கார்டு இல்லையென்றால் வாட்ஸ்அப் வேலை செய்யாது – ஜனவரி 1 முதல் புது ரூல்ஸ்

இந்தியாவில் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், பயனாளர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

வாட்ஸ்அப், டெலிகிராம் செயலியில் புதிதாக கணக்கைத் தொடங்கும்போது மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதற்கு வரும் சரிபார்ப்புக் குறியீட்டை பயன்படுத்தினால் போதுமானது. புது கணக்கு தயாராகிவிடும். அதன் பிறகு, அந்தச் சிம் கார்டை வேறொரு மொபைலில் மாற்றி வைத்தாலும் இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த முடியும்.

ஆனால், தற்போது வரப்போகும் புதிய விதிமுறைகள் படி உங்களது மொபைலில் சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு அகற்றப்பட்டாலோ, செயலிழந்தாலோ அல்லது வேறொரு எண்ணுக்கு மாற்றப்பட்டாலோ சம்பந்தப்பட்ட செயலிகள் வேலை செய்யாமல் போகும். இந்த புது விதியால் சிம் கார்டு இல்லாமல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

இந்திய மொபைல் எண்களைப் பயன்படுத்தி இணைய மோசடிகள் நடத்தப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});