சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து நீட்டிப்பு

சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மீண்டும் நீட்டித்துள்ளது.

சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எரிசக்தி ஆலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் அங்கு விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்தனர். இந்தச் சூழலில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ரியாத் நகருக்கான விமானங்கள் அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலும், ஜெட்டா, தம்மாம், மதீனா நகரங்களுக்கான விமானங்கள் அக்டோபர் 27-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});