இந்தியாவில் புதிய கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 2030-ம் ஆண்டு முதல் தானாகவே அவசர காலத்தில் பிரேக் போடும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன்படி, 2030 அக்டோபர் 1 முதல் புதிய கார் மாடல்களில் மேம்பட்ட தானியங்கி அவசரகால பிரேக்கிங் தொழில்நுட்பத்தை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் அபாயம் இருப்பதை உணர்ந்தால், முதலில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடவில்லை என்றால், சூழ்நிலைக்கு ஏற்ப இந்த அமைப்பு தானாகவே பிரேக் போட்டு காரின் வேகத்தை குறைக்க Automatic Emergency Braking System உதவும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு கார் தயாரிப்புச் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காரின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில் இந்தத் திட்டம் முக்கியமானதாக அமையலாம். இருப்பினும், ஓட்டுநர்கள் கவனமாக வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
இதையும் படிங்க : சிம் கார்டு இல்லையென்றால் வாட்ஸ்அப் வேலை செய்யாது – ஜனவரி 1 முதல் புது ரூல்ஸ்

