மழையில் முளைத்த காளான்களை சாப்பிட்டால் என்னாகும்? இதை தெரிந்துகொள்ளுங்கள்

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் மழை காரண​மாக ஆங்​காங்கே முளைத்​திருந்த காளான்​களை சமைத்து சாப்​பிட்ட வட​மாநில தொழிலா​ளர்​கள் 12 பேருக்கு வாந்தி, மயக்​கம் ஏற்​பட்​டது. அவர்கள் பொன்​னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழைக்காலத்தில் வீட்டுத் தோட்டம், புல்வெளி, மரங்களின் அடிப்பகுதி, ஈரமான மண் போன்ற இடங்களில் திடீரென காளான்கள் முளைப்பதை பார்த்திருப்போம். கடைகளில் விற்கப்படும் காளான்களும் இதுவும் ஒன்றா? இதை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். மழையில் முளைத்த காளான்களை சாப்பிடலாமா? அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.

மழையில் காளான்கள் ஏன் முளைக்கின்றன?

மழை பெய்யும்போது மண்ணில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அழுகிய இலைகள், மரக்கட்டைகள் போன்றவற்றில் உள்ள கரிமப் பொருட்களைப் பயன்படுத்திப் பல வகைப் பூஞ்சைகள் வளர்கின்றன. மண்ணில் ஏற்கெனவே இருக்கும் பூஞ்சையின் வளர்ச்சிக்கு ஈரப்பதமும் ஏற்ற வெப்பநிலையும் கிடைக்கும்போது காளான்கள் வெளியில் தோன்றுகின்றன.

மழையில் முளைத்த காளான்களை சாப்பிட்டால் என்னாகும்?

உண்மை என்னவென்றால், மழையில் தானாக முளைக்கும் காளான்களை சாப்பிடக்கூடாது. சில காளான்கள் உணவாகப் பயன்படுத்த ஏற்றவையாக இருந்தாலும், சிலவற்றில் கடுமையான நச்சுத்தன்மை இருக்கும். பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் காளான்களில்கூட நச்சுத்தன்மை மாறுபடலாம்.

நச்சுத்தன்மை கொண்ட காளான்களைச் சாப்பிட்டால், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் நீர்ச்சத்து குறையலாம். சில வகைக் காளான்கள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம். எனவே, மழையில் தானாக முளைக்கும் காளான்களைப் பறித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். நம்பகமான கடைகளில் விற்கப்படும் உணவுக்கான காளான்களைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது.

வீட்டுத் தோட்டத்தில் அல்லது குழந்தைகள் விளையாடும் இடத்தில் காளான்கள் முளைத்திருந்தால், அவற்றை யாரும் சாப்பிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});