மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சுகாசனம்! செய்வது எப்படி?

சுகாசனம் என்பது தரையில் கால்களை மடக்கி, முதுகை நேராக வைத்துக்கொண்டு அமரும் எளிய யோகா வகையாகும். தியானம் செய்வதற்கும், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதற்கும் இந்த ஆசனம் பயன்படுத்தப்படுகிறது.

சுகாசனம் செய்வது எப்படி?

தரையில் மென்மையான யோகா விரிப்பு விரித்து அமரவும். இரண்டு கால்களையும் மடக்கி, இரண்டு முழங்கால்களையும் இயன்ற அளவு தரைக்கு அருகில் வைக்கவும்.

முதுகையும் கழுத்தையும் நேராக வைத்துக்கொள்ளவும். முதுகை நேராக வைத்திருக்க முடியாவிட்டால் சுவரில் சாய்ந்தபடி அமரலாம்.

இரண்டு கைகளையும் முழங்கால்களின் மீது வசதியாக வைக்கவும். தோள்களைத் தளர்த்தி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும்.

முதல் முறை செய்யும் போது சில நிமிடங்கள் செய்யவும். பின்னர், உடலின் வசதிக்கு ஏற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

சுகாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சுகாசனம் செய்வதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். அன்றாட வேலைகளால் ஏற்படும் மனச் சோர்வை குறைக்கும். மாணவர்கள் படிப்பதற்கு முன்பும், வேலை செய்பவர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பும் சில நிமிடங்கள் இதை செய்யலாம்.

உடல்நலப் பிரச்சினைகள் இல்லாதவர்கள் தினமும் சில நிமிடங்கள் சுகாசனம் செய்யலாம். கடுமையான முதுகுவலி அல்லது முதுகெலும்புப் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});