தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘அர்னாப் புயல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயலைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் புயல் காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியான நிலையில் இந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});