மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘அர்னாப் புயல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அர்னாப் புயலைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
‘அர்னாப்’ புயல் தொடர்பாக செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அர்னாப் புயலின் நகர்வையும் அதன் தீவிரத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. புயல் வலுப்பெற்று வருவதால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளிலும், தெற்கு ஒடிசாவின் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே, பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

