இனி ரயிலில் மொபைலுக்கு சார்ஜ் போட முடியாது : புது ரூல்ஸ் அறிமுகம்

ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல், லேப்டாப்பிற்கு சார்ஜ் போடுவார்கள். இதற்காக அனைத்து வகையான ரெயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது ரயில் சார்ஜிங் பாயிண்ட் பயன்படுத்த புதிய ரூல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கைப்பேசி சார்ஜ் செய்யும் சார்ஜிங் பாயிண்ட்டை அணைத்து வைக்குமாறு இந்திய ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதில் எந்தவிதமான விதிவிலக்கும் வழங்கக் கூடாது என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவால் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தும் நிலவுவதால், இந்த உத்தரவை ரெயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திடீர் உத்தரவுக்குக் காரணம் என்ன?

சில தினங்களுக்கு முன்பு ரெயிலில் பயணி ஒருவர் பவர்பேங்கை சார்ஜிங் பாயிண்ட்டில் பொருத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தபோது வெடித்து புகை கிளம்பியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோன்ற அபாயங்களைக் குறைப்பதற்காகவே இரவு நேரச் சார்ஜிங் வசதியை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});