கிரீன் டீ உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆனால், தினமும் கிரீன் டீ குடிப்பது நல்லதா? இதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? அதிகமாகக் குடித்தால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களைப் பாதுகாக்கவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். மன அழுத்தத்தைக் குறைப்பது, மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பது, உடல் எடையை நிர்வகிப்பது போன்ற பல நன்மைகள் உள்ளன.

கிரீன் டீயில் உள்ள கேட்டச்சின்கள், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவக்கூடும். சில ஆய்வுகளில் கிரீன் டீ அருந்துவதற்கும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதற்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க இது உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சங்கு பூ டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்வது?
கிரீன் டீ உடலில் உள்ள கொழுப்பை எரிக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. கிரீன் டீ குறைந்த கலோரி கொண்ட பானம் என்பதால் இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கிரீன் டீயில் உள்ள பாலிபியூனால்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.மேலும், இது சரும செல்களைப் பாதுகாத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
கிரீன் டீ தீமைகள்
கிரீன் டீ உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் அதனை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல், குமட்டல் அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யலாம். எனவே, உணவருந்திய உடனே இதைக் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கிரீன் டீயில் காஃபின் உள்ளதால், இரவு நேரங்களில் அதிகம் குடிப்பதால் தூக்கத்தை கெடுக்கும். எனவே தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கிரீன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கிரீன் டீயை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
இதையும் படிங்க : வெந்நீர் குடித்த பிறகு நடைபயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)

