தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது, ரூ.150-ஐ எட்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயத்தின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});