சைகை மொழியில் வேலை கேட்ட மாற்றுத்திறனாளி – மறுநாளே கிடைத்த அரசு வேலை!

முதலமைச்சர் விஜய்யிடம் சைகை மொழியில் அரசு வேலை கேட்டு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு, ஒரே நாளில் அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், நேற்று (அக்டோபர் 28) சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார். அப்போது, தனக்கு அரசு வேலை வழங்க உதவுமாறு சைகை மொழி மூலம் கோரிக்கை விடுத்தார்.

தினேஷின் கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அரசு வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணை கிடைத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});