பாகிஸ்தானில் ஆம்புலன்ஸில் வெடித்த சிலிண்டர்; 10 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து, வாகனத்தில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});