தமிழக மின்வாரியத்தில் 500 பணியிடங்கள்.. தேர்வு கிடையாது!

தமிழக மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) டிப்ளமோ பொறியியல் படித்தவர்களுக்கு 500 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 28ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,900 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

எந்தெந்த பிரிவுகளில் எத்தனை காலியிடங்கள்?

மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (EEE) : 455
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) : 35
கணினிப் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் : 10
மொத்தம் : 500

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ நடத்தப்படாது. டிப்ளமோ படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியலிடப்படுவார்கள்.

அதன்பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});