ஐஐஎஃப்ஏ விருதுகள் 2026: 12 விருதுகளை அள்ளிய ‘துரந்தர்’

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான 26வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA Awards) வெற்றியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என மொத்தம் 12 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

துரந்தர் திரைப்படம் வென்ற 12 விருதுகள்

சிறந்த திரைப்படம் – துரந்தர் (தயாரிப்பாளர்கள்: ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தர், லோகேஷ் தர்).

சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர்.

சிறந்த நடிகர் – ரன்வீர் சிங்.

சிறந்த துணை நடிகர் – சஞ்சய் தத்.

சிறந்த வில்லன் கதாபாத்திர நடிகர் – அக்ஷய் கண்ணா.

சிறந்த இசையமைப்பு – ஷாஷ்வத் சச்தேவ்.

சிறந்த மூலக் கதை – ஆதித்யா தர்.

சிறந்த ஒளிப்பதிவு – விகாஷ் நோவ்லாகா.

சிறந்த திரைக்கதை – ஆதித்யா தர்.

சிறந்த வசனம் – ஆதித்யா தர்.

சிறந்த படத்தொகுப்பு – சிவ்குமார் வி. பனிக்கர்.

சிறந்த ஒலிவடிவமைப்பு – பிஷ்வதீப் சட்டர்ஜி.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});