பட்ஜெட் வெறும் 8 ஆயிரம் ரூபாய், ஆனால் வசூல் 75 ஆயிரம் ரூபாய் : எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று பல்வேறு தொழிநுட்பங்களை பயன்படுத்தி பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் பெரும்பாலும் வசனங்கள் இல்லாமல், காட்சிகள் மற்றும் பின்னணி இசையின் மூலம் மட்டுமே வெளிவந்தது.

இந்த சூழலில், தமிழின் முதல் பேசும் திரைப்படமாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ‘காளிதாஸ்’ திரைப்படம் சென்னையில் உள்ள கினிமா சென்ட்ரல் திரையரங்கில் வெளியானது. காளிதாஸ் திரைப்படத்தில் பி.ஜி. வெங்கடேசன் கதாநாயகனாக நடித்தார். டி.பி. ராஜலட்சுமி கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இடம்பெற்ற இருமொழிப் படமாகவும் காளிதாஸ் உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதக் கவிஞர் காளிதாசரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

திரையில் நடிகர்கள் பேசுவதையும் பாடுவதையும் கேட்கும் புதிய அனுபவத்தை காளிதாஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியது. படத்தின் மொத்த பட்ஜெட் அப்போதைய மதிப்பில் ரூ 8000 மட்டுமே. ஆனால் வசூல் ஆனது 75,000 ரூபாய். கிட்டத்தட்ட 10 மடங்கு லாபம் கிடைத்தது.

1930களில் எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்து விட்டன. அதில் நம் பெருமைக்குரிய காளிதாஸ் திரைப்படமும் ஒன்று என்பது வருத்தத்திற்குரிய செய்தி. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமாக வரலாற்றில் இடம்பிடித்த காளிதாஸ், பின்னாளில் உருவான ஏராளமான தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});