ஸ்மார்ட்போன் சந்தையில் பிரீமியம் மாடல்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், Xiaomi நிறுவனம் தனது புதிய Xiaomi 18 Pro மற்றும் Xiaomi 18 Pro Max ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பாரிஸில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் Xiaomi Watch S5 41mm, Smart Band 11 மற்றும் Xiaomi Clip Earbuds ஆகிய சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Xiaomi 18 Pro, 18 Pro Max டிஸ்பிளே அம்சங்கள்
Xiaomi 18 Pro ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பெரிய மாடலான Xiaomi 18 Pro Max-ல் 6.9 இன்ச் AMOLED திரை இடம்பெற்றுள்ளது. இரண்டு மாடல்களிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Xiaomi 18 Pro-வில் 2.7 இன்ச் திரையும், Pro Max மாடலில் 2.9 இன்ச் திரையும் இடம்பெற்றுள்ளன.
200MP கொண்ட இரண்டு கேமராக்கள்
கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை Xiaomi 18 Pro மற்றும் 18 Pro Max ஆகிய இரண்டு மாடல்களிலும் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. இதில் 200MP கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ரா வைடு கேமரா இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8K தரத்தில் 30fps வீடியோ பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
பிராசஸர் மற்றும் மென்பொருள்
Xiaomi 18 Pro மாடலில் Snapdragon 8 Elite Gen 6 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட Xiaomi 18 Pro Max மாடலில் Snapdragon 8 Elite Extreme Gen 6 சிப்செட் இடம்பெற்றுள்ளது.
இதனுடன் LPDDR5X RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் Android 17 அடிப்படையிலான Xiaomi HyperOS 4 இயங்குதளத்தில் செயல்படுகின்றன.
7,050mAh பேட்டரி திறன்
Xiaomi 18 Pro-வில் 6,000mAh பேட்டரியும், Xiaomi 18 Pro Max-ல் 7,050mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
Xiaomi 18 Pro சீரிஸ் விலை
ஐரோப்பிய சந்தையில் Xiaomi 18 Pro ஸ்மார்ட்போனின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1,399 யூரோக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 512GB வேரியண்ட் 1,599 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Xiaomi 18 Pro Max மாடலின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் பதிப்பு 1,599 யூரோக்களுக்கும், 512GB பதிப்பு 1,799 யூரோக்களுக்கும் கிடைக்கிறது. இதன் 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் 2,099 யூரோக்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆரம்ப விலைகள் ரூ.1.44 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் ஆகும்.

