தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக அவரது சகோதரரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களது ஆறு வயது மகளை மரிய வில்சனிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஆறு வயது மகள் மரிய வில்சனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கேர்லைன் கிளாட் குற்றம்சாட்டியுள்ளார். குழந்தையை மீட்டுத் தரக்கோரி ஏற்கனவே காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் மரிய வில்சன் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். குழந்தையை மீட்டுத் தரக்கோரி தாக்கல் செய்துள்ள மனு நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

