Power Button-ல் இருக்கும் வட்டமும் கோடும் எப்படி வந்தது தெரியுமா?

நாம் பயன்படுத்தும் மொபைல், லேப்டாப், கணினி, தொலைக்காட்சி எனப் பெரும்பாலான மின்னணு சாதனங்களில் Power Button-ல் வட்டமும் கோடும் இருப்பதை பார்த்திருப்போம். ON அல்லது OFF செய்யப் பயன்படுகிறது என்பது நமக்குத் தெரியும்.

அந்த வட்டமும் கோடும் ஏன் பயன்படுத்தப்படுகின்றன? எப்படி வந்தது என்று யோசித்திருக்கிறோமா? உண்மையில், இந்த வடிவமைப்பிற்குப் பின்னால் கணினித் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

Power Button வருவதற்கு முன்பு, மின்னணு சாதனங்களில் மின்சாரத்தை இயக்கவும் நிறுத்தவும் தனித்தனி சுவிட்சுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ON மற்றும் OFF என்ற வார்த்தைகள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், தொழில்நுட்ப சாதனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்படத் தொடங்கியபோது ஒரு சிக்கல் ஏற்பட்டது. எல்லா நாடுகளிலும் ஒரே மொழி பேசப்படுவதில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் ON, OFF போன்ற வார்த்தைகளை அனைவரும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என கருதினர். இதனால் பொதுவான குறியீடுகளைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

1 என்பது ON செய்வதை குறிக்கிறது. 0 என்பது OFF செய்வதை குறிக்கிறது. இந்த இரண்டு எண்களும் பின்னர் மின்னணு சுவிட்சுகளின் குறியீடுகளிலும் பயன்படுத்தப்பட்டன.இவ்விரண்டையும் ஒரே வடிவத்தில் இணைத்ததன் மூலம், இந்த குறியீடு வந்தது.

ஒரு சாதாரண வட்டமும் கோடும் கொண்ட இந்தச் சின்னம் உருவானதற்குப் பின்னால் பல ஆண்டுகால தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. மொழி வேறுபாடுகள் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்ற தேவையில் தொடங்கிய இந்த வடிவமைப்பு, இன்று மின்னணு சாதனங்களின் அடிப்படை அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க : 5 நாடுகளை கொண்ட உலகின் மிகப்பெரிய ஏரி – எங்கு உள்ளது தெரியுமா?

HTML tutorial