டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் லீடர் எடிஷனை கூடுதல் வசதிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.36.51 லட்சம் ஆகும்.
இதற்கான முன்பதிவு 2026 அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இந்தக் கார் இரண்டு வகைகளில் கிடைக்கும். 4×2 Manual விலை ரூ.36.51 லட்சத்திற்கும் 4×2 Automatic ரூ.38.72 லட்சத்திற்கும் கிடைக்கும். இந்த புதிய லீடர் எடிஷனில் வழக்கமான ஃபார்ச்சூனர் மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் பல தோற்ற மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
முந்தைய லீடர் எடிஷனில் 2.8 லிட்டர் டீசல் இயந்திரம், மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தானாக மடங்கும் வெளிப்புறப் பின்புறக் கண்ணாடிகள் மற்றும் டயர் காற்றழுத்தக் கண்காணிப்பு அமைப்பும் கூடுதல் வசதிகளாக வழங்கப்படுகின்றன.

