ஏ.ஆர். ரஹ்மானின் இசை மேஜிக் : ‘ரிதம்’ திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு

இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியான திரைப்படம் ‘ரிதம்’.இப்படத்தில் அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், இலட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

அர்ஜுன் வழக்கமான ஆக்ஷன் பாணியிலிருந்து விலகி, ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல, அதேபோல், கணவனை இழந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்ணின் கதாபாத்திரத்தில் மீனா சிறப்பான நடித்திருப்பார்.

ஐம்பூதங்களை மையமாகக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மானின் இசை மேஜிக்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது இதன் தனிச்சிறப்பு.

நீர்: ‘நதியே நதியே’ (பாடியவர்: உன்னிமேனன்)

காற்று: ‘காற்றே என் வாசல் வந்தாய்’ (பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி)

நிலம்: ‘தனியே தன்னந்தனியே’ (பாடியவர்: சங்கர் மகாதேவன்)

ஆகாயம்: ‘அன்பே இது’ (பாடியவர்: சாதனா சர்கம்)

நெருப்பு: ‘ஹையோ பத்திக்கிச்சு’ (பாடியவர்கள்: உதித் நாராயணன், வசுந்தரா தாஸ்)

26 ஆண்டுகள் நிறைவு

கடந்த 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. 26 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒரு சிறந்த ‘ஃபீல் குட்’ திரைப்படமாக நீங்காத இடம் பிடித்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial