ஒரே ஆண்டில் 62 சிங்கங்கள் பலி: குஜராத் சட்டப்பேரவையில் வெளியான அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் ஜூலை 31-ந்தேதி வரையிலான கடந்த ஓராண்டில் பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் 62 ஆசிய சிங்கங்கள், சிங்க குட்டிகள் உயிரிழந்துள்ளன என குஜராத் வனத்துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) ஆசிய சிங்கங்களின் உயிரிழப்பு தொடர்பான கேள்விக்கு வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதன்படி, 2025 ஆகஸ்ட் 1 முதல் 2026 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளால் மொத்தம் 62 சிங்கங்கள், சிங்க குட்டிகள் உயிரிழந்துள்ளன என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை இறந்த விலங்குகளின் உடற்கூறு பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கங்களிடையே நோய் பரவுவதைத் தடுப்பதற்காக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்,சிங்கங்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், கால்நடை மருத்துவ வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

மொத்த 62 உயிரிழப்புகளில் 28 சிங்கக் குட்டிகள் இடம்பெற்றுள்ளன. இது மொத்த உயிரிழப்புகளில் சுமார் 45.2 சதவீதமாகும். மேலும், 17 ஆண் சிங்கங்களும் 17 பெண் சிங்கங்களும் உயிரிழந்துள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial