கார்த்திகா உட்பட 9 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு – நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று (அக்.23) காலை கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கார்த்திகா கைது செய்யப்பட்டது ஏன்?

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

தாராபுரம் இடைத்தேர்தலின்போது, வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள முயன்றுள்ளனர். முதலமைச்சர் விஜய் அந்தப் பகுதியில் சாலை வழிப் பயணம் மேற்கொள்ள இருந்ததால், அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கார்த்திகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில், கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

கார்த்திகா கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா, டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கார்த்திகா உட்பட 9 பேரும் விடுவிப்பு

கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து கார்த்திகா உட்பட 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});