மீண்டும் ரிலீஸ் ஆகிறது விஜய் சேதுபதியின் ’96’ திரைப்படம்

பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். சுமார் ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘96’ திரைப்படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பும், ஜானுவாக நடித்த திரிஷாவின் நடிப்பும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றது. திரிஷா இந்த திரைப்படத்திற்காக பல்வேறு விருது விழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றார். விஜய் சேதுபதிக்கும் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைத்தன.

கோவிந்த் வசந்தா இசையமைத்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே தனிப்பெருந் துணையே’ பாடல் முதலில் படத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், டீசரில் வெளியான இந்தப் பாடல் ஹிட் அடிக்க, அதன்பிறகே மூன்று நிமிட பாடலாக இதனை உருவாக்கி படத்தில் இணைத்துள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், ’96’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது. அதன்படி இப்படம், வரும் அக்டோபர் 9ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial